சினிமா

இளையராஜா குரலில், யுவன் இசையில் வெளியானது ‘மாமனிதன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா’ என்ற இந்த பாடலை படத்திலிருந்து முதல் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இளையராஜா குரலில், யுவன் இசையில் வெளியானது ‘மாமனிதன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் சினிமாவில் மிக அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவாகி இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம் `மாமனிதன்'. விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள்.

இதில் விஜய் சேதுபதியுடன், காயத்ரி, அனிகா, குரு சோமசுந்தரம், ஷாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் போஸ்டர்கள் மட்டும் வெளியாகியிருந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் இப்போது வெளியாகியிருக்கிறது.

‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா’ என்ற இந்த பாடலை படத்திலிருந்து முதல் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். இப்பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இந்தப் படம் சில சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. சீக்கிரமே இதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் `துக்ளக் தர்பார்', `லாபம்', `யாதும் ஊரே யாவரும் கேளீர்', `முகிழ்' ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் `கடைசி விவசாயி' படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இவை தவிர, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `காத்து வாக்குல ரெண்டு காதல்', தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் `அனபெல் சுப்ரமணியம்', வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோல், மலையாளத்தில் 19(1)(a), மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் `மும்பைகர்', பாலிவுடில் உருவாகும் மௌனப்படம் `காந்தி டாக்கீஸ்' எனப் பல படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

banner

Related Stories

Related Stories