சினிமா

OTTல் ரிலீசாகிறது மத கஜ ராஜா - விஷாலின் 9 ஆண்டு காத்திருப்புக்கு செவி சாய்த்த நெட் ஃப்ளிக்ஸ்?

அடுத்தடுத்து பல படங்களில் இணைந்துள்ள நடிகர் விஷாலின் மத கஜ ராஜா படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

OTTல் ரிலீசாகிறது மத கஜ ராஜா - விஷாலின் 9 ஆண்டு காத்திருப்புக்கு செவி சாய்த்த நெட் ஃப்ளிக்ஸ்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஷால் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் `சக்ரா'. அதனைத் தொடர்ந்து `எனிமி' படத்தில் ஆர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கிறார். சமீபத்தில் தனது 31வது படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார். இப்படி அடுத்தடுத்து சினிமாவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் முழுதாக தயாராகி பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது சுந்தர் சி - விஷால் கூட்டணியில் 2012ல் உருவான படம் `மத கஜ ராஜா'. இதில் வரலட்சுமி, அஞ்சலி நாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் சந்தானம், நிதின் சத்யா, சோனு சூட், மனோபாலா, மறைந்த நடிகர் கலாபவன் மணி எனப் பலரும் நடித்திருந்தார்கள்.

ரிச்சட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். முழுதாக உருவாகியிருந்தாலும், சில பண பிரச்சனைகளால் இந்தப் படம் ரிலீஸை எட்ட முடியாமல் அப்படியே முடக்கப்பட்டது. ரிலீஸாகாமல் இருக்கும் படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகும் காலகட்டம் இது என சொல்லலாம்.

ஏனெனில் சமீபத்தில் அப்படி சில வருடங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய நெஞ்சம் மறப்பதில்லை படம் திரையரங்குகளில் வெளியானது. இப்போது 9 வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய, `மத கஜ ராஜா' படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதை நெட்ப்ளிக்ஸில் வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடக்கிறது என்ற தகவல்கள் உலவிக் கொண்டிருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories