சினிமா

யூரோப் செல்லும் விஜய் 65 படக்குழு; சென்னை திரும்பிய எனிமி டீம் - கோலிவுட் சினி பைட்ஸ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் அவரது 65வது படத்துக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வெளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூரோப் செல்லும் விஜய் 65 படக்குழு; சென்னை திரும்பிய எனிமி டீம் - கோலிவுட் சினி பைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லாக்டவுனால் மூடப்பட்ட திரையரங்குகள் மறுபடி திறக்க அனுமதி கிடைத்ததும் அதிக ஆடியன்ஸை திரையரங்கிற்கு அழைத்து வந்த படம் விஜய் நடித்த `மாஸ்டர்'. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது மேலும், ஓடிடி தளத்திலும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

இது விஜய் நடிக்கும் 65வது படம். இதில் முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு தெலுங்குப் படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக வளர்ந்திருக்கும் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இதில் இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கியிருக்கிறது.

சன் பிக்சஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சன் டிவி ஸ்டுடியோவிலேயே துவங்கியிருக்கிறது. தற்போது இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்திவிட்டு, தேர்தல் முடிந்த பின்பு படப்பிடிப்பை யூரோப்பில் தொடர இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வராததால் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். இந்தப் படங்களையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `எனிமி'. இதில் விஷால் ஹீரோவாகவும் அவருக்கு வில்லனாக ஆர்யாவும் நடிக்கிறார்கள். கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு, மறுபடி அனுமதி கிடைத்ததும் துபாயில் துவங்கி நடந்து கொண்டிருந்தது. 27 நாட்களாக துபாயில் நடந்த படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்திருக்கிறது.

இதனையடுத்து, படக்குழு சில தினங்களுக்கு முன் சென்னைக்கு திரும்பியுள்ளது. இன்னும் பத்து நாட்கள் மட்டும் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது, சென்னையில் நடக்க இருக்கும் அந்த பத்து நாள் படப்பிடிப்போடு மொத்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைய இருக்கிறது. விஷால் ஆர்யாவுடன், மம்தா மோகன் தாஸ், மிர்ணாளினி, கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மொத்தமாக 45 நாட்கள் துபாயில் ஷூட் செய்யப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் அடுத்து கட்ட வேலைகளையும் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

விஷால் - ஆர்யா நிஜத்தில் நண்பர்கள், அவர்கள் இருவரும் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சீக்கிரமே இதன் டீசர், பாடல்கள், ரிலீஸ் தேதி ஆகியவற்றை பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்காப்படுகிறது,

banner

Related Stories

Related Stories