சினிமா

எப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’? - பேய் இருக்கா இல்லையா... போகலாமா வேணாமா?

செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் எப்படி இருக்கிறது?

எப்படி இருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’? - பேய் இருக்கா இல்லையா... போகலாமா வேணாமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படம் எப்படி இருக்கிறது?

தனது வாழ்க்கையே, தான் வளர்ந்த ஆதரவற்றோர் இல்லத்துக்காகத்தான் என வாழ்கிறார் மரியம். அப்படி இருக்கையில், நல்ல சம்பளத்தோடு ஒரு குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலை அவருக்கு கிடைக்கிறது. அதுதான் ராமசாமி என்கிற ராம்சே - ஸ்வேதாவின் மகன். நிறைய பணம் கிடைத்தால் ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களை சிறப்பாக கவனிக்க முடியும் என எண்ணி ராம்சேவின் வீட்டுக்குள் நுழைகிறார் மரியம். அப்படிச் சென்றவருக்கு அந்த வீட்டில், என்ன நடக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதுதான் கதை.

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா கெசான்ட்ரா, வீட்டில் இருக்கும் அந்த நான்கு பேர் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு. எஸ்.ஜே.சூர்யா நியான் லைட்ஸ், எலக்ட்ரிக் கிட்டார் வைத்துச் செய்கிற ரகளை வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது.

இயேசு மக்களுக்காக சிலுவை சுமந்தது போல, ரெஜினா தனது ஆதரவற்றோர் இல்லத்துக்காக தனக்கு நடக்கும் விஷயங்களை சகித்துக் கொள்வது, புனித வெள்ளியன்று கொலை செய்யப்படுவது என நிறைய கிறிஸ்தவ நம்பிக்கைகள் சார்ந்த குறியீடுகளைப் பயன்படுத்தி ரெஜினாவின் கேரக்டரை இயேசு போல போர்ட்ரைட் செய்த விதம் ரசிக்கும்படியாக இருந்தது.

இதுபோன்ற படம் என்பதால் லைட்ஸ் ஆங்கிளில் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ எல்லாவற்றையும் செய்திருக்கிறார் அரவிந்த் கிருஷ்ணா. யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டானவைதான். படத்திலும் பாடல் இடம்பெறும் காட்சிகள் செம. குறிப்பாக, ‘கண்ணுங்களா’ பாடல் வேற லெவல். பின்னணி இசை பல படங்களில் நாம கேட்ட யுவனின் இசைத் தொகுப்புகளை நாஸ்டால்ஜியாவாக நினைவுபடுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக படம் போகலாமா வேணாமா... பேய் இருக்கா இல்லியா எனக் கேட்டால், இது பேய் படம் கிடையாது என்பதுதான் முதல் விஷயம். பேய் இருக்கும்தான். ஆனால், முனி, 13ஆம் நம்பர் வீடு டைப் கிடையாது. சொல்லப்போனால் ஒரு ட்விஸ்ட்க்குப் பிறகு Good vs Evil என படம் போகும். செல்வராகவனின் திகில் காமெடி பட அனுபவத்தைப் பெற விரும்பினால், நிச்சயமாகப் பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories