சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பணிகள் துவக்கம்!

உதயநிதி ஸ்டாலின் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பணிகள் துவக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

தமிழ் சினிமாவில் ‘தடம்’ படத்தின் மூலம் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி. அவரின் புதிய படத்தில், நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.

மேலும், ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும், அரோல் கரோலி இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தை இந்தாண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories