சினிமா

“ஃப்ளிப்கார்ட்டில் எதையும் வாங்காதீர்கள்” : மக்களை எச்சரிக்கும் பிரபல இசையமைப்பாளர் - அதிர்ச்சி தகவல்!

ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்ததற்கு வெறும் கற்களை கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஃப்ளிப்கார்ட்டில் எதையும் வாங்காதீர்கள்” : மக்களை எச்சரிக்கும் பிரபல இசையமைப்பாளர் - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சோப்பு, சீப்பு முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் சேவைகள் மூலம் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்றார்போல், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களும் தள்ளுபடிகளை வாரி இறைத்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

இருப்பினும், இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் சேவைகளில் பல்வேறு குளறுபடிகள், மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் சம்மந்தமில்லாத பொருட்களை டெலிவரி செய்வது, பண மோசடி என பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வகையில், தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான சாம்.சி.எஸ் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளார். தனது சகோதரருக்கு பரிசு வழங்குவதற்காக ஃப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து ஆப்பிள் வாட்ச் ஒன்றினை சர்ப்ரைசாக சகோதரரின் முகவரிக்கு டெலிவரியாகும்படி ஆர்டர் செய்திருக்கிறார்.

டெலிவரி செய்யப்பட்ட ஆர்டரை பிரித்து பார்த்தபோது அதில், ஆப்பிள் வாட்ச்சுக்கு பதில் 3 கற்கள் நன்றாக பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனையறிந்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்த அதன் மீது அந்நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் இருந்துள்ளது.

இதனால் கடுமையான அதிருப்திக்கு ஆளான சாம்.சி.எஸ்., தனது ட்விட்டர் பக்கத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு மோசடி பேர்வழி என்றும், அந்த தளத்தில் இருந்து யாரும் எதையும் வாங்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தீயாகப் பரவியதோடு, மக்களும் ஃப்ளிப்கார்ட்டில் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் எதுவும் சரியானதாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்டு புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories