சினிமா

திரைத்துறைக்கு மேலும் 1 கோடி ரூபாய் : முன்களப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.2.5 கோடி அறிவித்த சூர்யா!

ஏற்கெனவே தமிழ் திரைத்துறைக்கு 1.5 கோடி அளித்திருந்த நிலையில் தற்போது மேலும் 1 கோடி ரூபாய் வழங்க நடிகர் சூர்யா முடிவு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் சூர்யா நடித்து, தயாரித்திருக்கும் 'சூரரைப் போற்று’ படத்தை திரையரங்குகள் திறக்கப்படாததன் காரணமாக அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30ம் தேதி திரையிட இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி தயாரிப்பாளர், இயக்குநர்கள் பலர் சூர்யாவின் இந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி போன்றோர் வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையே ‘சூரரைப் போற்று’ படத்தின் வியாபாரத்தில் இருந்து 5 கோடி ரூபாய் திரைத்துறை மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த வாரம் இயக்குநர் சங்கத்துக்கு 20 லட்சம் ரூபாயும், பெப்சி அமைப்புக்கு ரூ.80 லட்சமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 30 லட்சம் ரூபாயும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 20 லட்சம் ரூபாயும் என 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருந்தார்.

அதேபோல, தற்போது விநியோகஸ்தர்கள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க முடிவெடுத்திருப்பதாக நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வரும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களின் குடும்பத்தில் கல்வி பயில்வோருக்கு 2.5 கோடி ரூபாய் வழங்கப்பட இருப்பதாகவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்து ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சூர்யா.

banner

Related Stories

Related Stories