சினிமா

“என்னிடம் உள்ள சுஷாந்தின் சொத்து இதுதான்” : இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட சுஷாந்த் சிங்கின் காதலி!

சுஷாந்த் சிங் தனது நோட்புக்கில் ஒரு குறிப்பை எழுதியதாக புகைப்படங்களை வெளியிட்டார் சுஷாந்தின் சிங்கின் காதலி.

“என்னிடம் உள்ள சுஷாந்தின் சொத்து இதுதான்” : இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட  சுஷாந்த் சிங்கின் காதலி!
PC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தி தன்னிடம் உள்ள சுஷாந்தின் ஒரே சொத்து என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கில் அவரது காதலியான ரியாவிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ரியா சக்ரபோர்த்தி ஊடகத்தினருக்கு “நான் வைத்திருக்கும் சுஷாந்தின் ஒரே சொத்து” என்று புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அது ஒரு தண்ணீர் புட்டியின் புகைப்படம். 2019-ம் ஆண்டு சுஷாந்த் சிங் நடித்து வெளியான ‘சிச்சோரே’ என்ற படத்தின் பெயர் அதில் அச்சிடப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு புகைப்படத்தையும் அவரது வழக்கறிஞர் மூலமாக ரியா வெளியிட்டுள்ளார். அதில் சுஷாந்த் சிங் ரியாவின் புத்தகத்தில் வாழ்வில் அவர் நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் 7 விஷயங்களின் பட்டியலை எழுதியுள்ளார்.

அதில் “நான் எனக்கு கிடைத்த வாழ்க்கைக்கு நன்றியுடன் உள்ளேன். லில்லு என் வாழ்வில் இருக்க நான் நன்றியுடன் உள்ளேன். பெபு என் வாழ்வில் இருக்க நான் நன்றியுடன் உள்ளேன். சார் என் வாழ்வில் இருக்க நான் நன்றியுடன் உள்ளேன். மேம் என் வாழ்வில் இருக்க நான் நன்றியுடன் உள்ளேன். ஃபட்ஜ் என் வாழ்வில் இருக்க நான் நன்றியுடன் உள்ளேன். என் வாழ்வில் கிடைக்கும் அத்தனை அன்புக்கும் நன்றியுடன் உள்ளேன்.” என எழுதப்பட்டுள்ளது.

சுஷாந்த் எழுதியதாக ரியா வெளியிட்டுள்ள புகைப்படம்.
சுஷாந்த் எழுதியதாக ரியா வெளியிட்டுள்ள புகைப்படம்.

“இது சுஷாந்த் சிங்கின் கையெழுத்து. லில்லு (ரியாவின் சகோதரர்), பெபு என்பது நான், சார் என்பது என் அப்பா, மேம் என்பது என் அம்மா. ஃபட்ஜ் என்பது சுஷாந்தின் நாய்.” என்று ரியா தெரிவித்துள்ளார்.

ஷோவிக் சக்ரபோர்த்தியும் சுஷாந்த் சிங்கின் தந்தை கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

“என்னிடம் உள்ள சுஷாந்தின் சொத்து இதுதான்” : இரண்டு புகைப்படங்களை வெளியிட்ட  சுஷாந்த் சிங்கின் காதலி!

ரியா சக்ரபோர்த்தி, ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் ரியாவின் முன்னாள் மேலாளர் சுருதி மோடி உள்ளிட்டோர் தனித்தனி அறையில் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகத்தில் நேற்று விசாரிக்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories