சினிமா

“OTT ரிலீஸுக்கு அதிகாரமுண்டு” - சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உட்பட 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை!

பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் தயாரிப்பாளார் 30 பேர் ஆதரவளித்து கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூர்யா தயாரிப்பில், ஜோதிகா-சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன்பு ஆன்லைன் தளத்தில் வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்து அதற்காக பல கோடி ரூபாய்க்கு படத்தை விற்றதாகவும் அண்மையில் செய்தி வெளியானது.

இதனையறிந்த திரையரங்க உரிமையாளர்கள், நடிகர் சூர்யாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் சூர்யா தயாரிப்பிலான படங்களை வெளியிடப்போவதில்லை என்றும் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், கொரோனா காரணமாக திரைத்துறை முடங்கி இருப்பதால் பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். ஆகையால் சூர்யாவின் OTT ரிலீசுக்கு தயாரிப்பாளார்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

அந்த வகையில், 30 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பொன்மகள் வந்தாள் ஆன்லைன் வெளியீட்டுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

அதில், “திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.

“OTT ரிலீஸுக்கு அதிகாரமுண்டு” - சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உட்பட 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை!

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும்.

தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம். இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இயக்குனர் பாரதிராஜா, K. முரளிதரன், T. சிவா, K.S.ஸ்ரீனிவாசன், K.ராஜன், K.E.ஞானவேல் ராஜா, H.முரளி, K.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், S.S.துரைராஜ், FEFSI சிவா, YNOT S. சஷிகாந்த், G.தனஞ்செயன், S.R.பிரபு, ராஜசேகர் பாண்டியன், JSK.சதீஷ்குமார், C.V.குமார், சுதன் சுந்தரம் (PASSION STUDIOS), சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories