சினிமா

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி மாற்றம் - அப்டேட் கொடுத்த படக்குழு!

அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் வலிமை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி மாற்றம் - அப்டேட் கொடுத்த படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் போலிஸ் கதையை களமாக கொண்டு இந்த படம் உருவாகி வந்தது.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் நடைபெற்றது. சென்னையிலும் படபிடிப்புகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் பாதிக்குள் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடியும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி மாற்றம் - அப்டேட் கொடுத்த படக்குழு!

மேலும், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பாராத விதமாக கொரோனா தாக்குதல் ஏற்பட்டதால், தற்போது ஒட்டுமொத்த சினிமா உலகும் முடங்கி போயுள்ளது. இதனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தியேட்டர்கள் மூடப்பட்டு, படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக முன்னணி ஹீரோக்களின் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித்தின் வலிமை படத்தின் வெளியீடும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி மாற்றம் - அப்டேட் கொடுத்த படக்குழு!

மேலும், 2021 பொங்கலுக்கு பிறகும் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்படலாம் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. ஏனெனில், கொரோனாவின் தாக்கம் எப்போது முடிவுக்கு வருமோ அதன் பிறகே படபிடிப்பு பணிகளில் இறங்க முடியும் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories