சினிமா

மகனுக்காக சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகர் விக்ரம்? - தீயாய் பரவும் வதந்தி!

நடிகர் விக்ரம் கோப்ரா படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

மகனுக்காக சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகர் விக்ரம்? - தீயாய் பரவும் வதந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் சியான் என அழைக்கப்படுபவர். மிகப்பெரிய ஹீராவாக வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறைக்கு வந்தவர் டப்பிங் கலைஞராக அறிமுகமாகி படிப்படியாக முன்னேற்றி இன்று மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார்.

பலர் அதிர்ஷ்டத்தை முன்வைத்து முன்னேறி இருந்தாலும், தன் நடிப்பு திறமை என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே முன்வைத்து தன்னம்பிக்கையை கைவிடாது எந்த கதாபாத்திரமானாலும் அர்ப்பணிப்போடு பணியாற்றி இயக்குநர்களின் நாயகனாகவே தக்கவைத்துக் கொண்டவர் விக்ரம். அந்த திறமைக்கெல்லாம் சாட்சியமாக தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது பல விருதுகளை குவித்துள்ளார்.

மகனுக்காக சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகர் விக்ரம்? - தீயாய் பரவும் வதந்தி!

இப்படி இருக்கையில், சமீப காலங்களாக விக்ரமின் படங்கள் ஏதும் போதுமான வரவேற்பை பெறவில்லை. அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படமும் மனதில் நிற்கவில்லை என்ற பேச்சுகள் அடிபட்டது. இதனையடுத்து, படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்த விக்ரம், தன்னுடைய மகன் துருவ் விக்ரமின் சினிமா வாழ்வில் கவனம் செலுத்த தொடங்கி, அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மாவுக்காக துருவ்வை வார்த்தெடுத்தார்.

தற்போது, தன்னுடைய நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் தசாவதாரம் எடுத்த கமல்ஹாசனையே மிஞ்சும் அளவுக்கு 20 வேடங்களில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. சமீபத்தின் கோப்ரா படத்தின் போஸ்டர்களின் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், கோப்ரா படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று, தன்னுடைய மகன் துருவ் விக்ரமின் எதிர்க்காலத்துக்காக விக்ரம் கவனம் செலுத்தவிருக்கிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனையறிந்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

விக்ரம் சமூக வலைதளங்களில் இல்லாவிட்டாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரது படங்களின் அப்டேட்டுகள் வரும் போது ட்ரெண்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த செய்தி அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்து, விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்துவுடனான கோப்ரா, மணிரத்னம் உடனான பொன்னியன் செல்வன் மற்றும் செவன் ஸ்கிரீன் தயாரிப்பிலான பெயரிடப்பாடத படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories