சினிமா

மீண்டும் தள்ளிப்போனது சூர்யாவின் படம்.. ரசிகர்கள் அதிருப்தி..

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் அடுத்தத்தடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களை ரிலீஸ் குறித்து வெளியான தகவல் அதிருப்தியடைய வைத்துள்ளது.

மீண்டும் தள்ளிப்போனது சூர்யாவின் படம்.. ரசிகர்கள் அதிருப்தி..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அபர்ணா முரளி, கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள வெய்யோன் சில்லி மற்றும் சூர்யா கதாப்பாத்திரத்துக்கான மாரா தீம் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் தள்ளிப்போனது சூர்யாவின் படம்.. ரசிகர்கள் அதிருப்தி..

அடுத்ததாக இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லருக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே படம் ரிலீசாகவிருந்த நிலையில் தள்ளிப்போனது. தற்போது இந்த ஆண்டின் கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் படம் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி சூரரைப் போற்று படம் ரிலீசாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசாகவுள்ளதால் தற்போது மீண்டும் பட ரிலீஸ் தள்ளிப்போயிருப்பது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories