சினிமா

அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் ’ஜிப்ஸி’ : “சரியான நேரம்.. சரியான படம்” - மு.க ஸ்டாலின் பாராட்டு !

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜிப்ஸி' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் ’ஜிப்ஸி’ : “சரியான நேரம்.. சரியான படம்” - மு.க ஸ்டாலின் பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குக்கூ, ஜோக்கர் போன்ற கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி’. லிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜீவா, நடாஷா சிங் மற்றும் பலர் நடித்த ’ஜிப்ஸி’ திரைப்படம் சென்சார் போர்டின் முட்டுக்கட்டைகளால் முடங்கிக் கிடந்தது. சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டும், சமூக அரசியல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி ‘ஜிப்ஸி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் ’ஜிப்ஸி’ : “சரியான நேரம்.. சரியான படம்” - மு.க ஸ்டாலின் பாராட்டு !

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தடைகளை எல்லாம் கடந்து மார்ச் மாதம் 6ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜிப்ஸி படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 2) மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் அரங்கில் நடந்த சிறப்புத் திரையிடலில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொருளாளர் துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோரும் ஜிப்ஸி படத்தை பார்த்துள்ளனர்.

படம் பார்த்த பிறகு, ஜிப்ஸி படக்குழுவினரை மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தூத்துக்குடியில் பார்த்த மு.க.ஸ்டாலின், இது படம் அல்ல பாடம் என பாராட்டி இருந்தார்.

banner

Related Stories

Related Stories