சினிமா

“வந்துட்டேன்னு சொல்லு” - நீண்ட நாட்களுக்கு பின் ரசிகர்கள் முன்பு சிம்பு உற்சாக பேச்சு - வைரல் வீடியோ!

சினிமாவில் இனி தொடர்ந்து நடிப்பேன் என ரசிகர்கள் மத்தியில் சிம்பு பேசியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“வந்துட்டேன்னு சொல்லு” - நீண்ட நாட்களுக்கு பின் ரசிகர்கள் முன்பு சிம்பு உற்சாக பேச்சு - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் சிம்புவின் ’மாநாடு’ படம் நீண்ட நெடிய சர்ச்சைகள், பிரச்னைகளை கடந்து மீண்டும் உறுதியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி என பல நட்சத்திர பட்டாளமே மாநாடு படத்தில் நடிக்கவுள்ளனர். அண்மையின் பூஜையுடன் படத்தின் படபிடிப்பு தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் வரை மாநாடு படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்பு நேரம் ஒதுக்கியுள்ளார்.

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு , மாநாடு படத்துக்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் சிம்புவின் வீடியோ வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோல, வெகுநாட்களுக்கு பிறகு பொது வெளியில் சிம்பு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகர் சிம்புவுக்கு ரசிகர்களும் மாணவர்களும் ஆரவாரமான வரவேற்பையும், கைத்தட்டல்களையும் கொடுத்து அசத்தியுள்ளனர். பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் மேடையில் சிம்பு பேசியது அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

அதில், “F1 கார் ரேஸின் போது, இடையே வீரர்கள் சிறிது நேரம் ப்ரேக் எடுத்து காருக்கான பெட்ரோல் மாற்றுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் களத்தில் இறங்குவார்கள். அதுபோல, என் சினிமா வாழ்க்கையிலும் சிறிய ப்ரேக் எடுத்திருந்தேன். இப்போ மாநாடு தொடங்கியுள்ளது. இனிமேல் தொடர்ந்து நடிப்பேன்.

எனக்கு படங்கள் கிடைப்பதை தடுக்கிறதுக்காவே சில கூட்டங்கள் வேலை செய்து வருகிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்பவுமே எனக்கு ஆதாரவையும் அன்பையும் நீங்கள் கொடுத்து வருவது அவர்களுக்கு மேலும் எரிச்சலடைய செய்கிறது.

நான் வெற்றியடைந்த போது என்னுடன் சிலர் இருந்தார்கள். ஆனால் தோல்வியை சந்திக்கும் போதெல்லாம் அந்த சிலருக்கு பதில் நீங்கள் (ரசிகர்கள்) தான் இருந்தீர்கள். உங்களை (ரசிகர்கள்) விட்டு எங்கும் சென்றுவிட மாட்டேன். உங்களை மறக்கவும் மாட்டேன்.” என ரசிகர்கள் மத்தியில் சிம்பு உணர்ச்சி பொங்கவும், உற்சாகவும் பேசியுள்ளார்.

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் சிம்பு பேசிய வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories