சினிமா

“காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து...” : வைரலாகும் சிம்புவின் வொர்க்-அவுட் வீடியோ! #Maanaadu2020

‘மாநாடு’ படத்துக்காக நடிகர் சிம்பு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து...” : வைரலாகும் சிம்புவின் வொர்க்-அவுட் வீடியோ! #Maanaadu2020
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீண்ட நெடிய சர்ச்சைகள், விமர்சனங்களுக்குப் பிறகு மீண்டும் உறுதியாகியுள்ளது ‘மாநாடு’ கூட்டணி. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பான பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகவுள்ள இந்த ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கம் என்பதால் வழக்கம் போல் பிரேம்ஜியும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில், ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதால் அதற்காக தன்னை பிரயத்தனப்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. ஏற்கெனவே வெளிநாட்டுக்குச் சென்று தன்னுடையை உடல் எடையைக் குறைத்திருந்த சிம்பு தற்போது மேலும் தன்னை உடல் ரீதியில் வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு சத்தம் அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும், சிங்கம் களம் இறங்கிடுச்சு” என பதிவிட்டு சிம்பு உடற் பயிற்சி செய்யும் வீடியோவை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories