சினிமா

தனுஷின் 'கொலவெறி' சாதனையை மிஞ்சும் விஜய்யின் 'Kutti story' - தாய்லாந்து வரை பரவிய மாஸ்டர் : வைரல் வீடியோ!

விஜய்யின் மாஸ்டர் பட பாடல் தாய்லாந்து மாணவர்களிடையே வரவேற்பை பெற்ற வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார்.

தனுஷின் 'கொலவெறி' சாதனையை மிஞ்சும் விஜய்யின் 'Kutti story' - தாய்லாந்து வரை பரவிய மாஸ்டர் : வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘Kutti Story’ பாடல் கடந்த 14ம் தேதி வெளியானது. ஆங்கிலம், தமிழ் கலந்துள்ள இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அனிருத் இசையில் உருவான இப்பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார்.

பாடல் வெளியான நாள் முதல் பட்டித் தொட்டியெங்கும் பரவி மாஸ்டர் ஹிட்டை கொடுத்துள்ளனர் ரசிகர்கள். சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மேலும் சாதனை படைத்துள்ளது விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல்.

தனுஷின் 'கொலவெறி' சாதனையை மிஞ்சும் விஜய்யின் 'Kutti story' - தாய்லாந்து வரை பரவிய மாஸ்டர் : வைரல் வீடியோ!

காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமே பாடலின் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளதால் காண்போரை எளிதாக கவர்துள்ளது மாஸ்டர் பாடல். டிக்-டாக்கில் வீடியோ பதிவேற்றி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

டிக்-டாக் பிரபலங்களுடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் குட்டி ஸ்டோரி பாடலுக்கு வீடியோ வெளியிட்டு மேலும் பிரபலப்படுத்தியுள்ளார். இந்நிலையில், விஜய்யின் இந்தப் பாடலுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் திரையிடப்பட்ட ‘மாஸ்டரின் குட்டி ஸ்டோரி’ பாடல் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், #KuttiStoryWorldwide என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

முன்னதாக, அனிருத் இசையில், தனுஷ் பாடி நடித்திருந்த ‘3’ படத்தின் Why this kolaveri பாடலும் இதுபோன்று உலக அளவில் வைரலாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories