சினிமா

மீண்டும் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளான இயக்குநர் அட்லீ.. இது புதுசு.. ஆனா பழசு..

காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் இயக்குநர் அட்லீ.

மீண்டும் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளான இயக்குநர் அட்லீ.. இது புதுசு.. ஆனா பழசு..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக உருவானவர் அட்லீ. அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியிருந்தார்.

ராஜா ராணி முதல் பிகில் வரை தான் இயக்கிய 4 படங்களுமே தமிழ் சினிமாவில் ஏற்கெனவே வந்த படங்களின் மறு உருவாக்கம் என நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை வறுத்தெடுத்து வருவது வழக்கம்

மீண்டும் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளான இயக்குநர் அட்லீ.. இது புதுசு.. ஆனா பழசு..

அதேபோல, படங்களுக்கான புரோமோஷன்களின் போதும், படம் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் வெளியாகும் போதும் ஏற்கெனவே பிரபலங்கள் பதிவிட்டிருந்த பதிவுக்கும் அட்லீயின் பதிவுக்கும் ஒத்துப்போகும் வகையிலேயே இருக்கும்.

இது மீம் கிரியேட்டர்களுக்கும் தீனி போடும் வகையில் அமைந்துவிடும். அந்த வகையில், உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

மீண்டும் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளான இயக்குநர் அட்லீ.. இது புதுசு.. ஆனா பழசு..

அதனையொட்டி, தனது காதல் மனைவி ப்ரியாவுடன் அட்லீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு காதலர் தின வாழ்த்தை தெரிவித்திருந்தார் அட்லீ.

இது, இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது மனைவியுடன் கடந்த 2017ம் ஆண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் போலவே இருக்கிறது என குறிப்பிட்டு நெட்டிசன்கள் வழக்கம் போல் அட்லீயை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories