சினிமா

‘விஜய் 65’ இயக்குநர் இருக்கட்டும்... 'மாஸ்டர்' பாடலாசிரியர் யார் தெரியுமா? - 'ஒரு குட்டிக் கதை' அப்டேட்!

‘மாஸ்டர்’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பாடலாசிரியர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது கோலிவுட்டில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

‘விஜய் 65’ இயக்குநர் இருக்கட்டும்... 'மாஸ்டர்' பாடலாசிரியர் யார் தெரியுமா? - 'ஒரு குட்டிக் கதை' அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’ என்பது ஊரறிந்த தகவல். கோடை விடுமுறைக்கு இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘மாஸ்டர்’ படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் வருமான வரித்துறை சோதனை பெரும் இடியாக வந்து விழுந்தது.

ஆனாலும் அசராமல் அடுத்த நாளே தனது ரசிகர்களைச் சந்தித்த நடிகர் விஜய், செல்ஃபி எடுத்து அசத்தினார். தற்போது இந்த கொண்டாட்டம் அடங்குவதற்குள் மாஸ்டர் பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்து போஸ்டர் வெளியிட்டு அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் அதகளம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் சிங்கிள் ட்ராக்கான ‘ஒரு குட்டிக் கதை’ பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார் என்றும் இன்று அறிவித்தது படக்குழு. இருப்பினும், படத்தின் பாடலாசிரியர் யார் என்பது மட்டும் இதுவரை அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் பாடல் வரிகளை எழுதியுள்ளது யார் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘ஒரு குட்டிக் கதை’ பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கக் கூடும் என்றும் பேசப்படுகிறது.

ஆனால், படக்குழுவிடம் விசாரித்ததில், வேண்டுமென்றேதான் ‘மாஸ்டர்’ படத்தின் பாடலாசிரியரை வெளிப்படுத்தாமல் உள்ளதாகவும் , சிங்கிள் ட்ராக் ரிலீஸின் போது யார் பாடலாசிரியர் என்பது தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், அதுகுறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories