சினிமா

“மறுபடியும் கிடார் தூக்க நான் ரெடி” - உருவாகிறது வாரணம் ஆயிரம் கூட்டணி? - சூர்யா சூசகம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாக சூர்யா வீடியோ ஒன்றில் பேசியுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

“மறுபடியும் கிடார் தூக்க நான் ரெடி” - உருவாகிறது வாரணம் ஆயிரம் கூட்டணி? - சூர்யா சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் சூர்யா, சுதா கொங்கராவின் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், தற்போது அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் ரிலீஸ் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு ஹரியுடனான இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளார். வழக்கம்போல், கமர்சியல் பாணியிலான படமாக இதுவும் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“மறுபடியும் கிடார் தூக்க நான் ரெடி” - உருவாகிறது வாரணம் ஆயிரம் கூட்டணி? - சூர்யா சூசகம்!

மேலும், இந்தப் படத்தில் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதேபோல, பிரசன்னா வில்லனாக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்க இருப்பதாகவும், அதற்கான ஒருவரிக் கதையை அவரிடம் கெளதம் மேனன் கூறியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கெளதம் மேனனின் 20 ஆண்டு சினிமா பயணம் குறித்த நிகழ்ச்சி நாளை மறுநாள் (பிப்.,02) சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

இதற்காக திரைப்பிரபலங்கள் பலர் கெளதம் மேனனை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் சூர்யாவும் பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், கெளதம் மேனன் உடனான பயணம் குறித்து நினைவுகூர்ந்த சூர்யா, “நீங்க சொன்னீங்கனா மறுபடியும் கிடார் தூக்குறதுக்கு நான் ரெடி” எனப் பேசியுள்ளார். இந்த வீடியோவை சூர்யா மற்றும் கெளதம் மேனன் ரசிகர்கள் ட்விட்டரில் வைரலாக்கி வருகின்றனர்.

முன்னதாக, தனது 40வது படத்துக்காக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ‘வாடிவாசல்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories