சினிமா

சூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்

ஜோஷ்வா படத்துக்கு பிறகு தான் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதை வெளிப்படையாக கூறியுள்ளார் கவுதம் மேனன் 

சூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த வாரம் வெளியாகியுள்ளது கவுதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, செந்தில் வீராசாமி, சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ENPT படம் வெளிவர பெரிதும் உதவியாக இருந்தது ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம். ஆகையால் வேல்ஸ் ஃபிலிம்ஸின் பேனரில் வருண் நடிக்கும் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனுஷ்கா நடிப்பிலான படத்தை இயக்கவுள்ளார் கவுதம் மேனன். இதனையும் வேல்ஸ் ஃபிலிம்ஸே தயாரிக்கவுள்ளது.

சூர்யாவுக்காக தயாராகும் கமல் கதை - கவுதம் மேனன் ஓபன் டாக்

இதற்கிடையில், சூர்யா - கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், கவுதம் மேனன் தான் தயார் செய்து வைத்திருக்கும் கதை ஒன்றை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், கமல் - காதம்பரி ஆகிய இருவரும் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள். இருவரும் இசையால் சந்திப்பதால் பாடல், இளையராஜா என படம் பயணிக்க இருக்கிறது. அவர்களின் காதல் வெற்றியடைந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை. இது சூர்யாவுக்கு பிடித்திருந்தால் நல்ல படமாக உருவாகும் என கவுதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து, சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணி உருவாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories