சினிமா

மீண்டும் நாவலை கையில் எடுத்த வெற்றிமாறன்: சூர்யா 40 படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் தலைப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

மீண்டும் நாவலை கையில் எடுத்த வெற்றிமாறன்: சூர்யா 40 படத்தின் டைட்டில் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கியிருந்த தனுஷின் அசுரன் படம் 100 நாட்களை கடந்த இன்றளவும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்த படத்துக்காக சூர்யாவுடன் இணைந்துள்ளார் வெற்றிமாறன்.

காப்பான் படத்துக்கு பிறகு தற்போது சூர்யா, சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

மீண்டும் நாவலை கையில் எடுத்த வெற்றிமாறன்: சூர்யா 40 படத்தின் டைட்டில் அறிவிப்பு!

இதனையடுத்து, சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியிலான படம் உருவாகவுள்ளது. வி கிரியேஷன்ஸின் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சூர்யா நடிப்பில் தான் இயக்கவிருக்கும் படத்தின் தலைப்பு வாடிவாசல் என அறிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

இது எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் எழுத்தில் உருவான வாடிவாசல் என்ற குறுநாவலின் கதை என்றும், அந்த கதையை படமாக எடுப்பதற்கான உரிமத்தை பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியின் படத் தலைப்பு அறிந்ததும் இருவரின் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் தங்களது பதிவுகளின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து, #Vaadivasal என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மீண்டும் நாவலை கையில் எடுத்த வெற்றிமாறன்: சூர்யா 40 படத்தின் டைட்டில் அறிவிப்பு!

ஏற்கெனவே வெக்கை நாவலை படமாக எடுத்து அசுர வெற்றியடைந்ததால் தற்போது வாடிவாசலும் ஜல்லிக்கட்டு காளைப் போல சீறிப்பாய்ந்து வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories