சினிமா

சாதனை படைத்த விற்பனை.. மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - அடித்து நொறுக்கும் ‘மாஸ்டர்’ விஜய் - விஜய் சேதுபதி !

விஜய்யின் மாஸ்டர் படத்தின் 3வது போஸ்டர் வெளியானதும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஆக்கிமிரத்துள்ளனர்.

சாதனை படைத்த விற்பனை.. மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - அடித்து நொறுக்கும் ‘மாஸ்டர்’ விஜய் - விஜய் சேதுபதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் படம் ’மாஸ்டர்’. விஜய்யின் 64வது படமாக உருவாகி வரும் இதில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதுவரை இரண்டு போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டு நிலையில் மாஸ்டர் படம் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது. முன்னதாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டி.வி வாங்கியிருந்தது.

ஏற்கெனவே படத்தின் மீதான ஆவல் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. தற்போது படத்தின் பெரும்பான்மையான விற்பனையும் முடிந்துள்ளதுள்ளது கோலிவுட்டிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு விஜய் - விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள மாஸ்டர் படத்தின் மூன்றாவது போஸ்டரை வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் 3வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட விஜயும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்ற போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சுமார் 20 ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்கள் ரீ ட்வீட் செய்தனர். இதனையடுத்து, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் #MasterThirdLook தீயாக வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories