சினிமா

‘தடுத்தா அதை உடைச்சு வருவேன்’ : சூரரைப் போற்று படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

கோடை விடுமுறைக்கு ரிலீஸாகவுள்ள சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.

‘தடுத்தா அதை உடைச்சு வருவேன்’ : சூரரைப் போற்று படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

‘காப்பான்’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தடுத்தா அதை உடைச்சு வருவேன்’ : சூரரைப் போற்று படத்தின் மாஸான அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சிக்யா என்ற நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் போஸ்டர்கள், மாரா தீம் ஆகியவை ரசிகர்களை கவர்ந்ததால் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு வெறித்தனமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷின் திடீர் அறிவிப்பு தீனிபோட்டுள்ளது. அதாவது, சூரரைப் போற்று படத்தின் மாரா தீம் பாடல் நாளை (ஜனவரி 24) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது என ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து #MaaraTheme என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மாரா தீம் பாடலை சூர்யாவே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories