சினிமா

விஜய்-சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்த மாஸ்டர் டீம்: செம அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்!

விஜயின் 64வது படமாக உருவாகும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படம் இந்த ஆண்டின் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. கைதி பட வெற்றிக்கு பிறகு அடுத்தபடியாக விஜயை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிப்பு வெளியான நாள் முதல் படத்தின் மீதான ஆவல் ரசிகர்களுக்கு அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.

படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட விஜயின் புகைப்படங்கள் வெளியாகி மேலும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த 31ம் தேதி மாஸ்டர் என்ற டைட்டிலுடன் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அதனையடுத்து அடுத்தத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த வேலையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாஸ்டர் படக்குழு.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எக்ஸ்.பி. கிரியேட்டர்ஸ், இந்த பொங்கல் நமக்கு செம ட்ரீட் மா என குறிப்பிட்டு நாளை (ஜன.,15) மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் மட்டுமல்லாமல் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. செகண்ட் லுக் அறிவிப்பு வெளியானதில் இருந்து ட்விட்டரில் #MasterSecondLook என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவின் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்-விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories