சினிமா

பாலிவுட் படத்தில் தமிழனாகவே நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ - லேட்டஸ்ட் அப்டேட்!

பாலிவுட் படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதி தமிழனாகவே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் படத்தில் தமிழனாகவே நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ - லேட்டஸ்ட் அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது இந்தி திரை உலகிலும் கால் தடத்தைப் பதித்துள்ளார்.

1994ல் ஹாலிவுட்டில் வெளியான Forrest Gump படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்காக உருவாகிறது Laal Singh Chaddha. இப்படத்தில், அமீர் கானுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சாட்ஸ்ரீ அகால் ஜி என்ற பெயரில் அமீர் கான் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

பாலிவுட் படத்தில் தமிழனாகவே நடிக்கும் ‘சங்கத் தமிழன்’ - லேட்டஸ்ட் அப்டேட்!

அமீர் கான் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் முழுவதும் விஜய் சேதுபதி தமிழில் பேசும் தமிழனாகவே நடிக்கவுள்ளாராம். இந்தி படம் ஒன்றில் தமிழ் நடிகர், நடிகையர்கள் நடிப்பது இயல்பான ஒன்றுதான்.

ஆனால், விஜய் சேதுபதி தமிழ் மொழியிலேயே பேசி நடிப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை மட்டுமல்லாமல், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸை முன்னிட்டு laal singh chaddha வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் கூடிய விரைவில் அமீர் கானின் படத்தில் இணைவார் எனக் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories