சினிமா

முடிவுக்கு வந்த விஜய் ‘மாஸ்டர்’ வியாபாரம் : ட்விட்டரை பரபரக்க வைத்த ரசிகர்கள்

விஜயின் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியானதை அடுத்து இந்திய அளவில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முடிவுக்கு வந்த விஜய் ‘மாஸ்டர்’ வியாபாரம் : ட்விட்டரை பரபரக்க வைத்த ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜயின் 64வது படமாக உருவாகி வருகிறது ‘மாஸ்டர்’. இதனை மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

கோடை விடுமுறைக்குப் ரிலீசாகவுள்ளதால் சென்னை, டெல்லி, கர்நாடகா என படு தீவிரமாக படம் உருவாகி வருகிறது. கைதி படம் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், இந்த முறை விஜயோடு இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகின்றனர்.

இதனால் படம் குறித்த எந்தத் தகவலாக இருந்தாலும் உடனடியாக அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து ட்விட்டரையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.

முடிவுக்கு வந்த விஜய் ‘மாஸ்டர்’ வியாபாரம் : ட்விட்டரை பரபரக்க வைத்த ரசிகர்கள்

படத்தில் விஜய் பேராசிரியராக, கல்லூரி மாணவராக நடிக்கிறார் என செய்திகள் வந்தது. இதனால் மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் கதை மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது.

படத்தின் போஸ்டர் வெளியாவதற்கு முன்பே சேட்டிலைட் உரிமத்தை சன் டீவி வாங்கியிருந்தது . இந்நிலையில், டீசர் வெளியாகும் தகவல் கூட இதுவரை வெளியாகாத நிலையில் படத்தின் வியாபாரம் முடிந்திருப்பது குறித்து தயாரிப்பு நிறுவனமான XB கிரியேஷன்ஸ் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, துபாய், ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் மாஸ்டர் படத்தின் விநியோகம் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பே அதன் வியாபாரம் முடிந்திருப்பது கோலிவுட்டில் உள்ள அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

மேலும், விநியோக அறிவிப்பு வந்த சில மணிநேரங்களிலேயே ட்விட்டரில் #BoxOfficeBaashaVIJAY என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories