சினிமா

உறுதியானது விஜய் - ஷங்கர் கூட்டணி? - ‘மாஸ்டர்’ பிரபலத்தின் ட்வீட்டால் பரபரப்பு!

விஜய் 65ன் இயக்குநர் யார் எனும் ரசிகர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உறுதியானது விஜய் - ஷங்கர் கூட்டணி? -  ‘மாஸ்டர்’ பிரபலத்தின் ட்வீட்டால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64வது படமான மாஸ்டரில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படம் ரிலீசாகவிருப்பதால் படபிடிப்பு பணிகள் சென்னை டெல்லியில் முடிவடைந்து தற்போது கர்நாடகாவின் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.

புத்தாண்டை முன்னிட்டு வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து விஜய் 65 படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி கோலிவுட்டில் பரபரப்பாக எழுந்து வருகிறது. இதற்கிடையில் ட்விட்டரில் #Thalapathy65 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்த நிலையின் விஜயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நண்பன் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இணையவுள்ளதாகவும் அது அவரது 65வது படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விருது விழா ஒன்றில் பேசிய இயக்குநர் ஷங்கர் “நானும் ரெடி; அவரும் ரெடி. எப்போது வேண்டுமானாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என தெரிவித்திருந்தார்.

தற்போது விஜய் 65 ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், கோலிவுட்டைச் சேர்ந்த ஜெகதிஷ் விஜய் - ஷங்கர் கூட்டணி தொடர்பான செய்தியில் உண்மையில்லை என ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories