சினிமா

இந்திய அளவில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘மாஸ்டர்’ : வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்திய அளவில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘மாஸ்டர்’ : வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிகில் படத்துக்கு பிறகு தனது 64வது படத்துக்காக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில், விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடிக்கிறார்.

மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, அர்ஜூன் தாஸ், கவுரி கிஷன், ஸ்ரீமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட இருப்பதால் படபிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தகவலை மட்டும் வெளியிட்ட படக்குழு அதற்கு பிறகு எதுவும் அறிவிக்காமல் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தன.

தளபதி 64 என்றே அழைக்கப்பட்டு வந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களை தனதாக்கி போஸ்டருக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், சரியாக மாலை 5 மணிக்கு விஜய் 64 படத்தின் போஸ்டரை நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. படத்துக்கு ‘மாஸ்டர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

போஸ்டர் ரிலீசான சிறிது நேரத்திலேயே #Master என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இடம் பெற்றது.

இந்திய அளவில் ட்ரெண்டாகும் விஜய்யின் ‘மாஸ்டர்’ : வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் அடுத்த இரண்டு போஸ்டர்களை இன்று நள்ளிரவும், நாளையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்தத்தடுத்த போஸ்டர் வெளியீட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories