சினிமா

சேரன் இயக்கத்தில் மீண்டும் இணைகிறதா ‘குண்டக்க மண்டக்க’ கூட்டணி? - சினிமா வட்டாரத்தில் பரவும் தகவல்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்திபனும், வடிவேலுவும் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சேரன் இயக்கத்தில் மீண்டும் இணைகிறதா ‘குண்டக்க மண்டக்க’ கூட்டணி? - சினிமா வட்டாரத்தில் பரவும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவுண்டமணி செந்திலை போன்று வடிவேலு பார்த்திபனின் கூட்டணியும் மிகவும் பிடித்தமான ஒன்று. பார்த்திபனின் நக்கலும், வடிவேலுவின் உடல்மொழி நகைச்சுவையும் அத்தனை பிரபலம்.

ஆனால், ‘24ம் புலிகேசி’ பிரச்னைக்கு பிறகு அண்மைக்காலமாகவே தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த வடிவேலு நேசமணி ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனதற்குப் பிறகு அவ்வப்போது சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் மீம் கிரியேட்டர்களால் வடிவேலு இன்றும் நிலைத்து நிற்கிறார்.

சேரன் இயக்கத்தில் மீண்டும் இணைகிறதா ‘குண்டக்க மண்டக்க’ கூட்டணி? - சினிமா வட்டாரத்தில் பரவும் தகவல்!

இந்நிலையில் ‘கமல் 60’ விழாவில் பங்கேற்றதற்குப் பிறகு நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் வடிவேலும் சந்தித்தனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த பார்த்திபன் “இன்றைய சந்திப்பு, நாளைய செய்தியாகலாம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்தப் பதிவும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி இருவரும் இணைந்து மீண்டும் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

மேலும், சேரன் இயக்கவிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ இரண்டாம் பாகத்தில் பார்த்திபனும், வடிவேலுவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனியார் விருது வழங்கும் விழாவில் பார்த்திபனும், வடிவேலும் சந்தித்த போது இருவரும் இணைந்து படத்தில் நடிப்பது தொடர்பாக பேசப்பட்டதாக அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெகுநாட்களாக வடிவேலுவின் படத்துக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பார்த்திபனுடன் இணைந்து மீண்டும் வடிவேலு நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories