சினிமா

வெப் சீரிஸா? 24ம் புலிகேசியா? - ஜனவரியில் வெளியாகிறது அறிவிப்பு!

இணையத்தொடரில் நடிப்பதாக வந்த செய்தி குறித்து நடிகர் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

வெப் சீரிஸா? 24ம் புலிகேசியா? - ஜனவரியில் வெளியாகிறது அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரைப்படங்களில் அவ்வளவாக தலையை காட்டாமல் இருந்தாலும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மூலம் நாளுக்கு நாள் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறார் நடிகர் வடிவேலு.

தற்போது 24ம் புலிகேசி படத்தின் சிக்கல்கள் நீங்கியதால் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு நடிகர் வடிவேலு திரும்பி இருக்கிறார்.

நேசமணி ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆன போது இணையதள சேனலுக்கு பேட்டி அளித்த வடிவேலு, “எனக்கு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போட்டாலும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் நடிப்பேன்” என பேசியிருந்தார்.

நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என வெப் சீரிஸ்கள் அதிக கவனம் ஈர்ப்பதால் வடிவேலும் வெப் சீரிஸில் நடிப்பேன் என பேசியிருந்தது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் வடிவேலு, தான் எந்த இணைய தொடரிலும் நடிக்கவில்லை என்றும், ஜனவரி மாதத்தில் தன்னுடைய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories