சினிமா

ரசிகர்களின் வெகுநேர காத்திருப்புக்குப் பின் வெளியானது ‘தர்பார்’ ட்ரெய்லர் ! (வீடியோ)

போலிஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ள 'தர்பார்' பட ட்ரெய்லர் ரிலீஸானது.

ரசிகர்களின் வெகுநேர காத்திருப்புக்குப் பின் வெளியானது ‘தர்பார்’ ட்ரெய்லர் ! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதன்முறையாக உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் ‘சும்மா கிழி’ பாடல் பெரும்பாலானோரை ஈர்த்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 9ம் தேதி படம் ரிலீஸாகவுள்ளதை அடுத்து இன்று தர்பாரின் ட்ரெய்லர் ரிலீஸானது.

ரசிகர்களின் வெகுநேர காத்திருப்புக்குப் பின் வெளியானது ‘தர்பார்’ ட்ரெய்லர் ! (வீடியோ)

மாலை 6.30 மணிக்கு ட்ரெய்லர் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படக்குழுவினரை சமூக வலைதளத்தில் கூர்ந்து பின்தொடர்ந்து வந்தனர். சிறிது நேரத்தில் ட்ரெய்லர் வெளியாகும் என லைகா தொடர்ந்து அறிவித்து தாமதப்படுத்தியதால் ரசிகர்கள் சற்றே அதிருப்தி அடைந்தனர்.

பின்னர் 6.50 மணிக்கு மேல் ட்ரெய்லர் ரிலீஸான சில மணிநேரங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மும்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மும்பை மாநகர போலிஸ் கமிஷனராக ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா, வில்லனாக சுனில் ஷெட்டி நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பஞ்ச் வசனங்கள் கலந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு தீனி போடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories