சினிமா

மீண்டும் உருவாகுகிறதா அஜித் - விஷ்ணு வர்தன் கூட்டணி? ரசிகர்கள் பரபரப்பு!

பில்லா படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் விஷ்ணு வர்தன் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மீண்டும் உருவாகுகிறதா அஜித் - விஷ்ணு வர்தன் கூட்டணி? ரசிகர்கள் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினியின் பில்லா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவான அஜித்தின் பில்லா படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதை அடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்

2007ம் ஆண்டு டிச.,14ல் வெளியான பில்லா படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளியான படம் என்பதாலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியிருந்ததாலும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது பில்லா படம்

மீண்டும் உருவாகுகிறதா அஜித் - விஷ்ணு வர்தன் கூட்டணி? ரசிகர்கள் பரபரப்பு!

ரீமேக் படமாக இருந்தாலும் ரஜினியின் பில்லாவுக்கு போட்டியாக இருக்கும் அளவுக்கு இயக்குநர் விஷ்ணுவர்தன் உருவாக்கியிருந்தார். ஆண்டுகள் பல கடந்தும் அஜித்துக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்த படமாக பில்லா அமைந்தது.

பில்லா படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதை அடுத்து இயக்குநர் விஷ்ணு வர்தன் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

அதில், “பில்லா வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நேற்று ரிலீசானது போல உணர்கிறேன். அஜித்துடன் இணைந்து எடுக்கப்பட்ட முதல் படம். ஆதரவளித்த அஜித் சார், படக்குழு மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிகள். விரைவில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு விரைவில் சந்திப்போம் என விஷ்ணு வர்தன் குறிப்பிட்டுள்ளதால் மீண்டும் அஜித்-விஷ்ணு வர்தன் கூட்டணியில் படம் உருவாகுமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் ஆரம்பம் படமும் வெளிவந்து அதுவும் சூப்பர் ஹிட்டை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories