சினிமா

விரைவில் வருகிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ : மகிழ்ச்சியில் திளைக்கும் செல்வா - யுவன் ரசிகர்கள்!

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.

விரைவில் வருகிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ : மகிழ்ச்சியில் திளைக்கும் செல்வா - யுவன் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கௌதம் மேனன் தயாரித்து இயக்கியிருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் பல்வேறு நிதி நெருக்கடி காரணமாக தள்ளிப்போய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐசரி கணேஷின் உதவியால் அண்மையில் ரிலீஸானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதேபோல், கௌதம் மேனனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

இளைஞர்களின் இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது ‘நெஞ்சம் மறப்பதில்லை’. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் 2016ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. ஆனால் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வை போன்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே சற்று தளர்ந்தது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் புது போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் படம் ரிலீஸாகவுள்ளது என தெரிவித்துள்ளது. இது அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories