சினிமா

மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகர் - வைரல் போட்டோ!

வெங்காய விலை ஏற்றத்தை அடுத்து நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவி ட்விங்கிள் கன்னாவுக்கு விலையுயர்ந்த பரிசை அளித்துள்ளார்.

மனைவிக்கு வெங்காய கம்மலை பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகர் - வைரல் போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெங்காய விலை அதிகரிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலையுயர்வுக்கு எதிரான கண்டனங்களை சமாளிப்பதற்காக எகிப்தில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டது.

ஆனால், எகிப்து வெங்காயம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும் நாட்டு வெங்காயத்துக்கு இணையாக எகிப்து வெங்காயம் மக்களைக் கவரவில்லை.

ஆகையால் எகிப்து வெங்காயத்தையும் மக்கள் வாங்குவதில் அவ்வளவாக விருப்பம் காட்டவில்லை. இதனால் வியாபாரிகளும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, சமூக வலைதளத்தில் மீம்ஸ்கள், வீடியோக்கள் என நெட்டிசன்களும் வெங்காய விலை உயர்வை கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல நடிகரான அக்‌ஷய் குமார் தனது மனைவியும் நடிகையுமான ட்விங்கிள் கன்னாவுக்கு வெங்காயத்தை வைத்து செய்யப்பட்ட கம்மலை பரிசாக அளித்துள்ளார்.

இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ட்விங்கிள் கன்னா, "இது இந்த சமயத்தின் சிறந்த விருது" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பாலிவுட் பிரபலங்கள் முதற்கொண்டு லட்சக் கணக்கானோரை ஈர்த்துள்ளது.

இதற்கிடையே, வெங்காய மற்றும் பூண்டின் விலை உயர்வுக்கு ஏற்றாற்போல் அதனை வைத்து பல ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories