சினிமா

ட்விட்டரில் ‘வெறித்தன' சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’ : பட்டியல் வெளியீடு!

வசூல் சாதனை படத்தை விஜய்யின் ‘பிகில்’ படம் ட்விட்டரில் படைத்த சாதனையை பட்டியலிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா.

ட்விட்டரில் ‘வெறித்தன' சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’ : பட்டியல் வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும், சர்ச்சையும் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், 2019ம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள் மற்றும் சாதனை குறித்து #ThisHappened2019 என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டர் இந்தியா பட்டியலை வெளியிட்டுள்ளது.

ட்விட்டரில் ‘வெறித்தன' சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’ : பட்டியல் வெளியீடு!

அதில், விஜய்யின் பிகில் பட போஸ்டர் ரிலீசான நாள் முதல் படம் தொடர்பாக படக்குழு வெளியிட்ட பல அறிவிப்புகள் என பலவற்றில் இடம்பெற்று #Bigil ஹேஷ்டேக் சாதனை படைத்துள்ளது.

அவற்றில் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகமாக ரீட்வீட் மற்றும் பின்னூட்டம் செய்யப்பட்ட ரீட்வீட்கள் பெற்ற பதிவாக நடிகர் விஜய் வெளியிட்ட ‘பிகில்’ படத்தின் போஸ்டர் ட்வீட் பெற்றுள்ளது. இந்த பதிவை 1 லட்சத்துக்கும் மேலானோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Bigil 6வது இடத்தைப் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் #Loksabhaelections2019 #chandrayaan2 ஆகியவை முதல் இரண்டு இடம்பிடித்துள்ளன. #avengersendgame 7வது இடத்தை பெற்றுள்ளது.

அடுத்தபடியாக, பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து ட்வீட் செய்துள்ள பெண்களில் ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி 4வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்களில் நடிகர் விஜய் 5வது இடத்திலும், இயக்குநர் அட்லீ 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு ட்விட்டரில் விஜய்யின் ‘பிகில்’ படம் பல பிரிவில் சாதனை பிடித்துள்ளது மட்டுமல்லாமல், இந்த பட்டியலில் வேறெந்த தமிழ் படமும் இடம்பெறாதது விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories