சினிமா

அமேசான் ப்ரைமில் வெளியாகிறதா ‘விஜய் 64’? - லேட்டஸ்ட் தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

‘விஜய் 64’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளது பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனம்.

அமேசான் ப்ரைமில் வெளியாகிறதா ‘விஜய் 64’? - லேட்டஸ்ட் தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் - லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘விஜய் 64’. சென்னை, டெல்லி என நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் அடுத்தகட்ட படபிடிப்புக்காக படக்குழு கர்நாடகா செல்லவுள்ளது. அங்கு, விஜய் - விஜய் சேதுபதி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதில் ‘கைதி’ பிரபலம் அர்ஜூன் தாஸும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைமில் வெளியாகிறதா ‘விஜய் 64’? - லேட்டஸ்ட் தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், ‘விஜய் 64’ டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போன்ற அப்டேட்டுகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, விஜய் 64 படத்தின் சாட்டிலை உரிமையை சன் டி.வி பெற்றுள்ளது என அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு கூட வெளியாகாமல் இருக்கும் நிலையில், சாட்டிலைட், டிஜிட்டல் என உரிம விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories