சினிமா

விஜய் 64ல் கைதி ‘அர்ஜூன் தாஸ்’ இணைந்ததன் பின்னணி தெரியுமா?

கைதி படத்தில் அன்புவாக நடித்த அர்ஜூன் தாஸ் விஜய் 64 படத்தில் இணைந்ததற்கான பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 விஜய் 64ல் கைதி ‘அர்ஜூன் தாஸ்’ இணைந்ததன் பின்னணி தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது விஜய் 64 (அ) தளபதி 64. இதில், நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்கள்.

மேலும், ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ரம்யா, கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் இந்த படத்தி நடிக்கின்றனர். சென்னை, டெல்லி என படபிடிப்பில் பிசியாக இருந்த படக்குழு, அடுத்தகட்ட படபிடிப்புக்காக கர்நாடகாவின் ஷிமோகாவுக்கு செல்லவுள்ளது.

அங்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் வானிலை சரியில்லாத காரணத்தால் படக்குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

 விஜய் 64ல் கைதி ‘அர்ஜூன் தாஸ்’ இணைந்ததன் பின்னணி தெரியுமா?

இந்நிலையில், கைதி படத்தில் அன்புவாக வந்து தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய அர்ஜூன் தாஸ் விஜய் 64 படத்தில் இணைந்திருப்பதாக நேற்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதற்கிடையில், விஜய் சேதுபதியுடன் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸும் நடிப்பதாக இருந்தது. அதற்கான கால்ஷீட் பிரச்னை வந்ததால் விஜய் 64ல் இருந்து ஆண்டனி வர்கீஸ் விலகியுள்ளாராம்.

அவருக்கு பதிலாக அர்ஜூன் தாஸை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்ததாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் செவி மடுத்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதிபடுத்தும் வகையில் எக்ஸ் பி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஆண்டனி வர்கீஸ் குறித்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கைதியில் சிறப்பான வில்லத்தனத்தை அர்ஜூன் தாஸ் வெளிப்படுத்தியதால் விஜய் 64லும் அதை விட அதிகமாகவே அதகளம் செய்வார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories