சினிமா

விஜய்யுடன் இணைந்த ’வில்லன்’ யார்? - வெளியானது ‘விஜய் 64’ முக்கிய அப்டேட்!

‘கைதி’ படத்தில் நடித்த பிரபலம், விஜய் 64ல் இணைந்துள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய்யுடன் இணைந்த ’வில்லன்’ யார்? - வெளியானது ‘விஜய் 64’  முக்கிய அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிகில் படத்துக்குப் பிறகு விஜய் தனது 64வது படத்துக்காக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்தப் படம் தளபதி 64/விஜய் 64 என அழைக்கப்பட்டு வருகிறது.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ், ரம்யா, கவுரி கிஷன், பிரேம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சென்னை, டெல்லி என படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் டிசம்பர் 1 முதல் ஜனவரி 18 வரை கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சிறையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், விஜய் - விஜய் சேதுபதி - ஆண்டனி வர்கீஸ் இடம்பெறும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில், விஜய் 64 குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘கைதி’ படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் விஜய் 64 படத்தில் நடிக்கவுள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஜனவரி 1ம் தேதி விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என ஏற்கெனவே தகவல் வெளியானதை அடுத்து அதுதொடர்பான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், #Thalapathy64 என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

banner

Related Stories

Related Stories