சினிமா

“இளம் நடிகருக்கு திடீர் தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்” -‘தலைமுடி’யால் மலையாள படவுலகில் பெரும் சர்ச்சை! 

மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகாம் மீது குற்றச்சாட்டு கூறி அவருக்கு திடீர் தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதனால் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

“இளம் நடிகருக்கு திடீர் தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்” -‘தலைமுடி’யால் மலையாள படவுலகில் பெரும் சர்ச்சை! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

கம்மட்டிபாடம், கும்பளாங்கி நைட்ஸ், பறவா உள்ளிட்ட மல்லுவுட்டின் முக்கியமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஷேன் நிகாம். இவர் ஜோபி ஜார்ஜ் தயாரித்த ‘வெயில்’ எனும் படத்தில் நடித்து வந்திருக்கிறார். இதில் நடிக்க ரூ. 30 லட்சம் கேட்ட ஷேன், படப்பிடிப்பு தொடங்கியதும் ரூ. 40 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கும் ஷேனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் காரணமாக ‘வெயில்’ படப்பிடிப்பு முடியும் முன்பே தனது ஹேர் ஸ்டைலை மாற்றி ‘குர்பானி’ எனும் படத்தில் ஷேன் நடித்ததாகக் கூறப்படுகிறது.

“இளம் நடிகருக்கு திடீர் தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்” -‘தலைமுடி’யால் மலையாள படவுலகில் பெரும் சர்ச்சை! 

‘வெயில்’ படத்துக்கு குறிப்பிட்ட ஹேர் ஸ்டைல் இருக்க வேண்டும் என்பது படப்பிடிப்பு குழுவின் நிபந்தனை. ஆனால் ஷேன் அதனை மீறியிருக்கிறார். இந்த சூழலில் ஜோபி ஜார்ஜ் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஷேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஷேன், மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது உங்கள் சொந்த பிரச்னை என சங்கம் பதிலளித்திருந்தது. அதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்னை குறித்து தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ், ‘என் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே வேறு படத்தில் ஷேன் நடிப்பதாக எனக்கு தகவல் வந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். என் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்கும்படி தயாரிப்பாளர் சங்கம் ஷேனுக்கு உத்தரவிட்டது.

புதிய கெட்டப்பில் ஷேன் நிகாம்
புதிய கெட்டப்பில் ஷேன் நிகாம்

அதை ஏற்றுக்கொண்ட ஷேன், 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக சொன்னார். ஆனால் சொன்னபடி படப்பிடிப்புக்கு வரவில்லை, கேட்டதற்கு 25ஆம் தேதி வருகிறேன் என்கிறார். நான் குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிக்கவில்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்படும்’ என தெரிவித்தார்.

இதனிடையே மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் ஷேன் நிகாம் திரைப்படங்களில் நடிப்பதற்கு திடீர் தடை விதித்துள்ளது.

ஷேன் நிகாம் - தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ்
ஷேன் நிகாம் - தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ்

இதுகுறித்து கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளார் ராகேஷ் கூறுகையில், “வெயில் படப்பிடிப்புக்காக, அவர் சரியான நேரத்தில் 2-3 நாட்களுக்கு மட்டுமே செட்டுகளுக்கு வந்துள்ளார். மீதமுள்ள நாட்களில், அவர் காணாமல் போவார், அல்லது வெறுமனே தனது கேரவனில் இருந்து வெளியேற மறுப்பார், சண்டையிட்டு குழுவினருடன் வாக்குவாதம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்வார்.

கொச்சியிலிருந்து இருப்பிட தளத்திற்கு வந்த அவரது தாயை நாங்கள் அழைக்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் அவர் தனது தாய்க்கு யார் தகவல் கொடுத்தார் என்று கேட்டு ஒரு சண்டையைத் தூண்டினார்” என்று குற்றம்சாட்டினார்.

“இளம் நடிகருக்கு திடீர் தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்” -‘தலைமுடி’யால் மலையாள படவுலகில் பெரும் சர்ச்சை! 

மேலும், இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தற்போது திரைப்படத் துறையில் இளம் நடிகர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும், இதுகுறித்து படப்பிடிப்பு தளங்களில் வந்து சோதனையிட கலால் துறையை வரவேற்பதாகவும் கூறினர்.

இந்த போதை குற்றச்சாட்டினை ஷேன் நிகாமும், அவரது தாயாரான சுனிலாவும் மறுத்துள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு எதிராக பேசியதாலும், தலைமுடி அமைப்பை மாற்றிதாலும் அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக திரையுலக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“இளம் நடிகருக்கு திடீர் தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்” -‘தலைமுடி’யால் மலையாள படவுலகில் பெரும் சர்ச்சை! 

இந்த திடீர் தடை தொடர்பாக ஷேன் கூறுகையில், "நான் ஏன் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பது பற்றி அவர்களிடம் பேசச் சென்றேன். கடந்த நான்கு நாட்களாக ஊடகங்களுடன் பேச வேண்டாம், எனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்க வேண்டாம் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த அதே தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேசினேன்.

அன்டோ ஜோசப், சியாத் கோக்கர் மற்றும் மஹா சுபைர் என்னிடம் எந்த அவசரமும் இல்லை, பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள். நான் அவர்களின் பையன் என்றும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் சொன்னார்கள், என்னை அடக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவு குறித்து யாரை அழைத்து கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

“இளம் நடிகருக்கு திடீர் தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம்” -‘தலைமுடி’யால் மலையாள படவுலகில் பெரும் சர்ச்சை! 

இதனிடையே சில நடிகர்களும், இயக்குநர்களும் ஷேன் நிகாமுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து , ‘இஷ்க்’ பட இயக்குனர் அனுராஜ் மனோகர், “சினிமாவின் புதுமுக நடிகர். ஷேனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்னை மிகவும் வேதனைப்படுத்துகின்றன. கலந்துரையாடல்களில் சம்பந்தப்பட்டவர்களால் இந்த பிரச்சினை அமைதியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்.

சினிமா என்பது ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை மூச்சு. ஒவ்வொரு பிரச்சினையும் ஆழமான காயங்களை உருவாக்கும். இரு கட்சிகளும் தங்களது தனிப்பட்ட விரோதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவுக்கு ஒன்றுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஷேன் நிகாம் ‘தலைமுடி’விவகாரமும், அதனைத் தொடர்ந்த அவருக்கான தடையும் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories