சினிமா

#ENPTREVIEW : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

தனுஷ் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் எப்படி இருக்கிறது?

#ENPTREVIEW  : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மூன்று வருஷ போராட்டத்துக்கு பின் வெளியாகியிருக்கிறது எனை நோக்கி பாயும் தோட்டா. கெளதம்மேனன் - தனுஷ் காம்போவில் ஒரு வித்தியாச முயற்சி. நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

சூழ்நிலை காரணமாக நான்கு வருடமாக பிரிந்து சென்ற காதலியிடம் இருந்து ஒரு போன் கால். காதலி பிரச்னையில் இருக்கிறார். கூடவே அண்ணன் சசிகுமாரும் ஆபத்தில் இருக்கிறார்.

காதலி மேகா ஆகாஷை தேடி மும்பை செல்கிறார் ஹீரோ தனுஷ். அடுத்த 5 நாட்கள் என்ன நடக்க போகுது, ஏன் இதெல்லாம் நடக்கிறது, ஏன் ஹீரோவுக்கு இதெல்லாம் நடக்கிறது என்பதே நாயகன் தனுஷைத் தேடி வந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

#ENPTREVIEW  : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

தனுஷ்... எந்த குறையும் எந்தப் படத்திலும் சொல்லிவிட முடியாத நடிப்பு. அசுர வேட்டையாக சமீபத்தில் ரசித்த தனுஷூக்கு இந்த முறை ஒரு க்ளாஸி லுக். முகபாவணையும், ஆக்‌ஷனிலும், ரொமான்ஸிலும் என கலக்குகிறார்.

தோட்டாவை பெல்டில் வாங்கி தப்பிப்பது, கல்லூரி ஷூட்டிங்கில் மேகா ஆகாஷை சந்திக்கும் இடத்தில், வில்லனிடமிருந்து மேகா ஆகாஷை காப்பாத்தி கூட்டிச் செல்வது என கெளதமின் அக்மார்க் அதே ஹீரோ. ஆனா, இந்த முறை தனுஷ் ஸ்டைலில்...!

சொல்லப் போனால், மேகா ஆகாஷுக்கு அறிமுகமாகியிருக்க வேண்டிய படம் இது தான். நடிப்பில் அத்தனை ஸ்பெஷல் இல்லையென்றாலும், அழகில் கொள்ளை கொள்கிறார். அதுபோல, மற்றுமொரு முக்கிய லீட் சசிகுமார். தனுஷின் அண்ணனாக சின்ன ரோல் என்றாலும் மாஸ் காட்டுகிறார்.

#ENPTREVIEW  : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

தர்புகாவின் பாடல்கள் மட்டுமல்ல, படத்தின் பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுப்படுத்துகிறார். Mr. X பாடலுக்கும், பின்னணி இசைக்கும் வாவ் சொல்ல வைக்கிறார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாமே படத்துக்கு ப்ளஸ்.

கெளதமின் இயக்கமும், விறுவிறு திரைக்கதையும் ரசிகனை இருக்கையில் அழுத்தி அமரவைத்தாலும், கதையாக படம் புதியதாக சர்ப்ரைஸ் கொடுக்கவில்லை. கெளதம் படமென்றாலே எதாவது ஒன்று வித்தியாசமாக இருக்கும். அந்த வித்தியாசம் இங்கு மிஸ்ஸிங்.

#ENPTREVIEW  : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

படம் முழுக்க தனுஷூக்கு வரும் வாய்ஸ் ஓவர், சசிகுமாருக்கான கதையில் நேர்த்தி இல்லாமை, ஏன் மேகா ஆகாஷ் நான்கு வருடம் தனுஷை பிரிந்து இருக்கார், அதுக்கு ஒரு சப்பை காரணம் தானா? துப்பாக்கியவே பிடிக்க தெரியாத ஹீரோ, க்ளைமேக்ஸில் இரண்டு துப்பாகியை ஒரே நேரத்தில் அசால்டா தூக்கி சுடுறார் இப்படி நிறைய சொல்லலாம்.

அச்சம் என்பது மடமையடா டிராப் ஆகிவிடும் சூழலில் இருந்த போது தான், தனுஷை வைத்து இந்தப் படத்தை துவங்கினார் கெளதம். அதனால், அந்த கதையையே பட்டி டிங்கரிங் பார்த்தது போல இருக்கிறது இந்த எனை நோக்கி பாயும் தோட்டா. சிம்பு படத்தின் ஒரு நேர்த்தியான வெர்ஷனாக இருக்கிறது தனுஷின் படம் அவ்வளவே.

#ENPTREVIEW  : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

பொதுவாக, கௌதம் மேனன் படத்தில் வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு காமெடி இல்லாமல் கூட இருக்கும், ஆனால் உணர்ச்சி பொங்குற மாதிரி காதல் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் இந்த படம் கொஞ்சம் வித்தியாசம். தன்னோட வழக்கமான பாணியில், வாய்ஸ் ஓவரில் தன்னுடைய படத்தை துவங்கியிருக்கார் கெளதம்.

ஷில்லவுட்டில் வரும் பின்னணி குரல்,“ அம்மா, அப்பா, அண்ணன், அண்ணனின் காதல், தன்னோட காதல்”னு நரேட் பண்ணும் ஒவ்வொன்றும் படத்தின் க்ளாஸ் ரக நாட். கையில் காப்பு, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ரெஃபரென்ஸ், மேல்தட்டு குடும்பம் என கெளதம் படத்துக்கான அறிகுறிகள் இதிலும் இருக்கிறது.

#ENPTREVIEW  : நம்மை நோக்கி பாய்ந்த இந்த ‘தோட்டா’ தேறுமா...தேறாதா?

மறுவார்த்தை பேசாதே.... எதிர்பார்த்த அந்த கிரேஸை விஷூவலில் வந்து செல்கிறது. காதல், ஆக்‌ஷன் கூடவே அண்ணன் - தம்பி செண்டிமெண்ட் இப்படியாக முடிகிறது படம். கெளதம் பட வெறியர்களுக்கு நிச்சயம் இந்த தோட்டா மகிழ்விக்கும்.

மூணு வருஷ காத்திருப்பு இப்படியாகிடுச்சேன்னு ஃபீல் பண்ணுற நடுநிலை ஆடியன்ஸ்கள், படம் முடிந்து வெளியே வந்தால்... நிச்சயம் மறுவார்த்தை பேசாம கிளம்பிடுவாங்க...! அவ்வளவுதாங்க.....

- சபரி

banner

Related Stories

Related Stories