சினிமா

'ஸ்பைடர் மேன் 3' படத்தின் கதை இதுதானா? - இணையத்தில் லீக் ஆன மார்வெல்லின் ஸ்கிரிப்ட்!

ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் வரிசையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பைடர் மேன் 3 படத்தின் கதை லீக் ஆனது.

'ஸ்பைடர் மேன் 3' படத்தின் கதை இதுதானா? - இணையத்தில் லீக் ஆன மார்வெல்லின் ஸ்கிரிப்ட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிறைய போராட்டங்களுக்கு மத்தியில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸுக்குள் மீண்டும் வந்துள்ளது ஸ்பைடர் மேன் கதாபாத்திரம். இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாகத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோனி நிறுவனத்துக்கும் டிஸ்னிக்குமான மோதல் நிறைவுற்று, ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கான இரண்டு படங்களை எடுக்க சோனி அனுமதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ‘ஸ்பைடர் மேன் 3’ படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. ‘ஸ்பைடர் மேன்: ஹொம் அலோன்’ என்று அழைக்கப்படும் இந்தப் படத்திற்கு இன்னும் முறையான டைட்டில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், படம் 2021ம் ஆண்டு வெளியாகும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

2021ல் தான் படம் வெளியாகப் போகிறது என்றாலும் படத்தின் படப்பிடிப்பு வேலைகளை 2020-லேயே முடித்துவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மார்வெல். இதனால் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை தொடங்கியுள்ளது மார்வெல் நிறுவனம். தற்போது இதிலிருந்து சில முக்கிய Key Pointகள் மட்டும் இணையத்தில் லீக்காகியுள்ளன. இதன் மூலமாக இந்தப் படத்தின் கதை எப்படி நகரவிருக்கிறது என்பதை எளிதில் கணிக்க முடிகிறது.

பீட்டர் பார்க்கர் 
பீட்டர் பார்க்கர் 

கடைசியாக வெளியான ‘ஸ்பைடர் மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தில் வில்லனாக வந்த மிஸ்டீரியோ படத்தின் இறுதியில் ஸ்பைடர் மேனால்தான் இறக்கப் போவதாகவும், ஸ்பைடர் மேனின் ஒரிஜினாலிட்டி ‘பீட்டர் பார்க்கர்’ எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். பீட்டர் பார்க்கர்தான் ‘ஸ்பைடர் மேன்’ என்பதை அறிந்த அரசு ட்ரோன்ஸ் மூலமாக நிகழ்ந்த சேதங்களுக்கு பீட்டர் தான் காரணம் என கருதி அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்குவதில் இருந்து 3ம் பாகம் தொடங்குகிறது.

போலிஸாரால் கைது செய்யப்படும் பீட்டர் பார்க்கரை சிறையில் வைத்தே கொலை செய்யும் முயற்சிகள் நடக்கிறது. இதில் சிறையில் உள்ளவர்கள் மட்டுமல்லாது காவல் பணியில் இருக்கும் அதிகாரிகளே ஈடுபடுகின்றனர். இதற்கிடையே பீட்டரை கொல்ல போலிஸாருக்கும், சிறை பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட இந்த கலவரங்கள் அனைத்திற்கும் பீட்டர்தான் காரணம் என மற்றொரு பழியும் இவரின் மீது விழ அங்கிருந்து வேறொரு இடத்திற்கு பீட்டர் அழைத்து செல்லப்படுகிறார்.

வழியிலேயே பீட்டர் பார்க்கரை கொல்லும் முயற்சியும் நடைபெறுகிறது. இந்த முயற்சியில் ஈடுபடுவது ‘க்ரேவன்’. பணத்திற்காக கொலை செய்யும் இந்த வேட்டைக்காரன் பீட்டரை கொல்ல வந்த இடத்தில் வாகனத்தில் வந்த அனைவரையும் கொன்று விடுகிறான். இதனை அடுத்து க்ரேவனுக்கும் பீட்டருக்கும் ஏற்படும் சண்டைக்குப் பிறகு தப்பிச்சென்ற பீட்டர் மீது போலிஸாரை கொன்ற பழியும் வந்து சேர்கிறது.

க்ரேவன்
க்ரேவன்

இந்த பிரச்னைகளுக்கு நடுவே, பீட்டர் பார்க்கர் ஸ்பைடர் மேன் பவர் இல்லாமல் தன்னை கொலை செய்ய முயற்சிக்கும் நபரை தேட முயல்கிறார். இந்த தேடுதலில் தான் ‘ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப்’ படத்தின் தொடர்பு வருகிறது, அந்தப் படத்தின் மெயின் வில்லனான ‘பென்னி ஃபெக்கர்’ தான் ஸ்பைடர் மேனை கொல்பவர்களுக்கு பெரிய தொகையிலான பணம் கொடுக்கப்படும் என்று கூறி ஆட்களை ஏவிவிடுவது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து அயர்ன் மேனின் நண்பனான ஹாப்பியை தொடர்புகொண்டு தனது நிலையை விளக்கும் பீட்டர், தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ள ஹாப்பியிடம் வேண்டுகோள் விடுக்கிறார். அதே நேரம் ஹாப்பியும் பீட்டரை பின்தொடர தொடங்குகிறார்.

ஒரு பக்கம் போலிஸ் மற்றும் கவர்மெண்ட் இன்னொரு பக்கம் கூலிக்கு கொலை செய்யும் கும்பல்கள் என மும்முனை கத்திகளின் இடையே தனது சூட்டும் வெப் பவரும் இல்லாமல் ஸ்பைடர்மேன் தன்னை கொல்ல துடிக்கும் பென்னி ஃபெக்கரை தேடிச் செல்கிறார். கிட்டத்தட்ட அயர்ன் மேன் 3 படத்தில் டோனிக்கு நேர்ந்த அதே நிலைதான் பார்க்கருக்கும். இந்த நேரத்தில்தான் பென்னி ஃபெக்கர் யார் என்பது பீட்டருக்கு தெரியவருகிறது.

அது பீட்டருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அந்த பென்னி ஃபெக்கர் வேறு யாரும் இல்லை முந்தைய பாகத்தின் வில்லனாக வந்த குயிண்டன் பெக். ஆரம்பத்தில் இறந்துவிட்டதாக காட்டப்பட்ட குயிண்டன் உயிரோடு இருப்பது படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து குயிண்டனை நேருக்கு நேராக சந்திப்பதற்குள் தனது ஸ்பைடர் மேன் சூட்டை பெற ஹாப்பியை தொடர்பு கொள்கிறார் பீட்டர் பார்க்கர். அப்போது ஹாப்பி பீட்டருக்கு ஜெசிகா ட்ரோன் என்பவரை அறிமுகப்படுத்துகிறார்.

இணையத்தில் லீக் ஆன Spider Man 2 Plot
இணையத்தில் லீக் ஆன Spider Man 2 Plot

காமிக் புத்தகங்களில் ஸ்பைடர் உமனாக இருக்கும் ஜெசிகா கேரக்டர், இந்தப் படத்தில் பீட்டரின் மீது தவறேதும் இல்லை என்பதை உணர்ந்து அவருக்கு உதவும் வகையில் வடிவமைத்துள்ளனர். கூடவே ஹாப்பி பீட்டருக்கு ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங் சூட்டையும் வெப் சூட்டையும் திரும்பக் கொடுகிறார். இதனையடுத்து பென்னி ஃபெக்கை சந்திக்க செல்லும் ஸ்பைடர் மேன், வழியிலேயே க்ரேவனை சந்திக்க நேர்கிறது. அங்கு நடக்கும் சண்டையில் க்ரேவனை வீழ்த்தி அவன் மூலமாகவே பென்னி ஃபெக் இருக்கும் இடத்தை அறிந்துக் கொள்ளும் பீட்டருக்கு ‘ஃபெக் நார்மன் ஆஸ்மன்’ என்பவருக்காக தான் இந்த வேலைகளை செய்வதும் தெரிய வருகிறது.

ஒரு பவர்ஃபுல் லீடராக வளர்ந்து கொண்டிருக்கும் நார்மன், க்ரேவன் இறந்ததை அறிந்து மீடியாவிடம் மெயின் வில்லனான குயிண்டன் பெக் இறக்கவில்லை, ஸ்பைடர் மேன் ஒரு அப்பாவி, அவர் மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ என அறிக்கை வெளியிட்டு அதற்கான ஆதரங்களை கொடுத்து ஸ்பைடர் மேனுக்கு உதவுகிறார். இவை அனைத்தையும் நார்மன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், மக்களிடம் நற்பெயரைப் பெறுவதற்காகவும் செய்கிறார்.

நார்மனின் பேட்டிக்கு பிறகு தனக்கிருந்த சிக்கல்களில் இருந்து மீண்ட ஸ்பைடர் மேன், குயிண்டன் பெக்கை நேருக்கு நேர் சந்தித்து சண்டையிடும் காட்சிதான் படத்தின் க்ளைமாக்ஸ் ஆக அமையவிருக்கிறது. அந்ப்த இடத்தில் முந்தைய பாகத்தில் வந்த இல்யூஷன் சண்டைக்காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாகத்தான் அடுத்து வரவிருக்கும் ஸ்பைடர் மேன் 3 படம் பயணிக்கப் போவதாக ஒரு ப்ளாட் லீக்காகியுள்ளது.

ஸ்பைடர் மேன் , குயிண்டன் பெக்
ஸ்பைடர் மேன் , குயிண்டன் பெக்

லீக் ஆன இந்த கீ ப்ளாட்டால் ஸ்பைடர் மேன் 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், லீக் ஆன கதைக்களம் நன்றாகவே இருந்தாலும், மேலும் சுவாரஸ்யங்களை கூட்ட மார்வெல் இன்னும் பல விஷயங்களை சேர்க்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- சுரேஷ்

banner

Related Stories

Related Stories