சினிமா

தர்பாரின் "Bullet No.1 Loaded" : புதிய அறிவிப்பு குறித்து அனிருத் சூசகம்!

ரஜினியின் தர்பார் படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளிவர இருப்பதாக அனிருத் ட்வீட் செய்துள்ளார்.

தர்பாரின் "Bullet No.1 Loaded" : புதிய அறிவிப்பு குறித்து அனிருத் சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினியின் தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வெகுதீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 7ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதையொட்டி ரசிகர்கள் தர்பார் பாடல்களுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தர்பார் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக அதற்கான Guessing பதிவுகளை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களும் "வெய்ட்டிங்கே வெறியாகுது" என்ற நிலையில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், தர்பார் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளதாக அனிருத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், Bullet No.1 loaded & ready to fire! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அநேகமாக படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதியாக இருக்கும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தர்பார் படத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடலான சும்மா கிழி என்ற பாடலை பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாடியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories