சினிமா

Icon of Golden Jublee - கோவா திரைப்பட விழாவில் கெளரவிக்கப்பட்ட ரஜினி!

கோவா திரைப்பட விழாவில் கோல்டன் ஜூப்ளி விருது பெற்ற ரஜினிகாந்தின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது

Icon of Golden Jublee - கோவா திரைப்பட விழாவில் கெளரவிக்கப்பட்ட ரஜினி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (International Film Festival of India (IFFI) ) 50ம் ஆண்டு கோவாவில் வெகு விமரிசையாக இன்று மாலை தொடங்கப்பட்டது. இதில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.

Icon of Golden Jublee - கோவா திரைப்பட விழாவில் கெளரவிக்கப்பட்ட ரஜினி!

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து நடத்துகின்ற இந்த சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடக்கும் திரைப்பட விழா பொன் விழாவாக கொண்டாடப்படுவதால் இந்திய சினிமாவின் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையில் விருது வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

Icon of Golden Jublee - கோவா திரைப்பட விழாவில் கெளரவிக்கப்பட்ட ரஜினி!

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்துக்கு Icon of Golden Jublee என்ற விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது இன்று மாலை கோவாலில் நடந்த திரைப்பட விழாவின் தொடக்கவிழாவில் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் வழங்கினர்.

அதன் பிறகு பேசிய ரஜினிகாந்த், ”இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பெருமைமிக்க இந்த விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. இதனைத் தந்த மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்” என மேடையில் ரஜினி பேசினார்.

தொடர்ந்து பேசியவர், எனது ரசிகர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி என்றார். கோவா திரைப்பட விழாவில் ரஜினி விருது பெற்றதை மகிழ்விக்கும் விதமாக அவர் பேசியதை பகிர்ந்த அவரது ரசிகர்கள் #PrideIconofIndiaRAJINIKANTH என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories