சினிமா

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட அப்டேட் வெளியானது!

ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட அப்டேட் வெளியானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகுபலி, பாகுபலி 2 படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, ராஜமவுலியின் இயக்கத்தில் மற்றுமொரு பிரமாண்ட படமாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர். இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அஜய் தேவ்கன், ஆலியா பட், ரம்யா கிருஷ்ணன், சமுத்திரகனி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட அப்டேட் வெளியானது!

படத்துக்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாததால் ஆர்.ஆர்.ஆர் என அழைக்கப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜூ, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. 300 கோடி செலவில் டி.வி.வி. நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

70% படபிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், படத்தில் உள்ள இரண்டு நாயகர்களில் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியே இல்லாமல் இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஷூட்டிங் இடையே கதாநாயகர்களுக்கு காயம், படத்தில் இருந்து ஹாலிவுட் நாயகி ஒருவர் விலகியது உள்ளிட்ட பல படத்துக்கு சற்று பின்னடைவை கொடுத்து வந்தது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படம் தொடர்பான அனைத்து செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் வகையில் அதன் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை (நவ.,20) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு இன்று மாலை வெளியான அறிவிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ஓலிவா மோரீஸ் ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடிப்பதாக புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது.

மேலும், வில்லன் வில்லியாக ரே ஸ்டீவன்சன் மற்றும் அலிசன் டூடி ஆகிய இருவரும் ஸ்காட் மற்றும் லேடி ஸ்காட்டாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளால் உற்சாகமடைந்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட அனைத்து மொழிகளிலும் 2020 ஜூலை 30ம் தேதி ரிலீசாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories