இந்தியா

“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமூக வலைதளங்களில் 'சைல்டு மோட்' போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.

“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமை என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இணையத்தை அணுகுவதும் பயன்படுத்துவதும் ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை உரிமையாகும். வயது வித்தியாசமின்றி குழந்தைகளுக்கும் இந்த உரிமை பொருந்தும்.

குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது. அவ்வாறு முழுமையாகத் தடை விதிப்பது, குழந்தைகளை ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் மிகவும் ஆபத்தான சட்டவிரோத இணையதளங்களை நோக்கித் தள்ளிவிடும்.

குழந்தைகளின் இணைய சுதந்திரமும், அவர்களின் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல; இரண்டையுமே உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இணையத் தடையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் 'சைல்டு மோட்' போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். மேலும், பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலை அதிகரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

மேலும், இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் ஆபாசப் பொருட்கள் பரவுவதைத் தடுக்கவும், அவற்றைக் கண்டறிந்து நீக்கவும் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories