சினிமா

நயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

நயன்தாராவின் பிறந்தநாளை விக்னேஷ் சிவனின் நெற்றிக்கண் படக்குழுவினர் கொண்டாடிய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

நயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்னேஷ் சிவனின் நெற்றிக்கண் படக்குழுவினர் நயன்தாராவின் பிறந்த நாளை கொண்டாடிய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா, தனது 35வது பிறந்த நாளை நேற்று (நவ.18) காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் கொண்டாடினார்.

இதற்கிடையே, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நெற்றிக்கண் படக்குழுவினர் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.

நயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இது நயன்தாரா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அன்னதானம் செய்த போட்டோவையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories