சினிமா

அஜித்துடன் மீண்டும் நடிக்கிறாரா நயன்தாரா? - விக்னேஷ் சிவன் பகிர்ந்த போட்டோவால் பரபரப்பு!

விஸ்வாசம் படத்துக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறாரா நடிகை நயன்தாரா என இணையத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

அஜித்துடன் மீண்டும் நடிக்கிறாரா நயன்தாரா? - விக்னேஷ் சிவன் பகிர்ந்த போட்டோவால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தனது பிறந்த நாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அதேச்சமயத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தனது பிறந்தநாளை மகள் ரிஷிகபூருடன் அமெரிக்காவில் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள போனிகபூருடன் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் 60வது படமான வலிமை படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் போனி கபூர் நயன் தாராவின் சந்திப்பு மீண்டும் அஜித்துடன் நடிப்பதற்கானதாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

ஏற்கெனவே நயன்தாராவும் அஜித்தும் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் வலிமை படத்திலும் நயன்தாரா நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.

வலிமை படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிப்பதால் அவருக்கு ஒத்துப்போகும் வகையிலான ஹீரோயினை படக்குழு தேர்வு செய்து வருவதும், வலிமை படக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories