சினிமா

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனதால் மார்வெல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்வெல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்கு பிறகு, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. இது உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த டைட்டானிக், அவதார் வசூலையே மிஞ்சி முதலிடத்தைப் பெற்றது.

ரோஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் இருந்து சில நீக்கப்பட்ட காட்சிகளை டிஸ்னி ப்ளஸ் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகிறது.

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!

அதில் மிக முக்கியமாக டோனி ஸ்டார்க்கும் அவரது மகள் மார்கன் ஸ்டார்க்கும் பேசும் காட்சி மார்வெல் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக ரசிக்க வைத்துள்ளது. இதுபோன்ற காட்சிகளை எல்லாம் ஏன் படத்தில் சேர்க்கவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், டிஸ்னி தரப்பிலிருந்து வெளியிடாமல் எண்ட்கேம் படத்தின் வீடியோ ஒன்று லீக்காகி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்ஃபினிட்டி ஸ்டோன்களில் ஒன்றான டைம் ஸ்டோைனை வாங்குவதற்காக ஏன்சியன்ட் ஒன்னை காண ஹல்க் செல்லும் அந்த காட்சியின் வேறொரு வடிவம்தான் அது.

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!

எண்ட்கேம் படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகளை விட மிகவும் மாறுபட்டதாக அமைந்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் காட்சி. இது மார்வெல் ரசிகர்களிடையே ஏகப்பட்ட கேள்விகளை முன்வைத்துள்ளது.

இன்ஃபினிட்டி ஸ்டோன்களை பயன்படுத்தி தானோஸ் பாதி உலகை அழிக்க, அதனை சரிசெய்யவே இந்த எண்ட்கேம் படம் உருவாகியிருந்தது. இதில் டைம் ஸ்டோன்தான் மிகப்பெரிய அங்கம் வகிப்பதாக அமைந்திருந்தது.

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!

டைம் ஸ்டோனை வாங்குவதற்காக சென்ற ஹல்க்கிடம், அந்த ஸ்டோனை வைத்திருக்கும் Ancient One ஆன Tilda Swinton, “இந்த இன்ஃபினிட்டி ஸ்டோன்கள் மூலம் இறந்துபோன எவரையும் உயிர்ப்பிக்க வைக்கமுடியாது. இதைச் செய்வதின் மூலம் அவெஞ்சர்ஸின் திட்டங்கள் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்.”

இதனைக்கேட்டு குழப்பத்தில் ஆழ்ந்த ஹல்க்கிடம், “இன்ஃபினிட்டி வாரின் போது தானோஸ் இட்ட சொடக்கால் பாதி உலகில் இருப்பவர்கள் அழிந்துபோகவில்லை என்றும், அவர்கள் அனைவரும் மறைந்தே போயுள்ளார்கள்” என்றும் Tilda கூறுகிறார்.

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!

அதனையடுத்து, tildaவிடம் இருந்து டைம் ஸ்டோனை பெற்ற பிறகு, அனைத்து அவெஞ்சர்ஸையும் திரும்ப வரவைக்கிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இன்ஃபினிட்டி வாரின் போது தானோஸ் செய்ததை தான் எண்ட்கேமில் அயர்ன் மேனும் செய்திருப்பார்.

அதாவது, தானோஸ் எப்படி ஒரே சொடக்கில் பாதி உலகை அழித்ததாக காட்சிப்படுத்தப்பட்டதோ, அதையேதான் எண்ட்கேமில் ஒரே சொடக்கில் தானோஸை அழிக்க அயர்ன் மேன் செய்திருப்பார். ஆகவே Tildaவின் கூற்றுப்படி, டைம் ஸ்டோனின் மூலம் திரும்ப வந்த அவெஞ்சர்ஸை போல், மீண்டும் இந்த டைம்லைன் வருவதற்கான வாய்ப்புகளும் அதனால் மறைந்த தானோஸ் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பும் இருக்குமா என குழப்பத்தோடு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எண்ட்கேமில் அழிந்த தானோஸ் மீண்டும் திரும்புவாரா?- Ancient One வீடியோவால் குழப்பத்தில் மார்வெல் ரசிகர்கள்!

இன்ஃபினிட்டி ஸ்டோன்களை அழிப்பதே எண்ட்கேமில் அவெஞ்சர்ஸின் நோக்கமாக இருந்தது. ஆனால் தானோஸின் எதிர்பாராத தாக்குதலால்தான் அயர்ன் மேன் இன்ஃபினிட்டி ஸ்டோன்களை பயன்படுத்தி தானோஸை அழித்திருப்பார். ஆனால் இதுவரையில் அந்த இன்ஃபினிட்டி ஸ்டோன்கள் அழிக்கப்பட்டதா இல்லையா என்பதை எதிர்வரும் மார்வெல் படங்களின் மூலமே தெரிந்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை, ஸ்டோன்கள் இருக்கும்பட்சத்தில் Tildaவின் கூற்றுப்படி தானோஸ் மீண்டும் திரும்ப அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories