சினிமா

‘தர்பார்’ படத்துக்கு “ஸ்டைலா, கெத்தா” டப்பிங் கொடுக்கும் ரஜினி - வைரலாகும் போட்டோ!

தர்பார் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் ரஜினியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

‘தர்பார்’ படத்துக்கு “ஸ்டைலா, கெத்தா” டப்பிங் கொடுக்கும் ரஜினி - வைரலாகும் போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன்முறையாக உருவாகி வரும் படம் தர்பார். ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு இந்த படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கிறார். போலிஸாக நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று முதல் ‘தர்பார்’ படத்தின் டப்பிங்கில் கலந்துகொள்வார் என ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் செய்திருந்தார். தற்போது, ஸ்டைலாக ரஜினி டப்பிங் பேசுவது போன்ற புகைப்படங்களை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனையறிந்த ரசிகர்கள் ரஜினி டப்பிங் பேசும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் தர்பார் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

banner

Related Stories

Related Stories