சினிமா

வெளியானது ‘அவெஞ்சர்ஸ்’ நீக்கப்பட்ட காட்சி:மீண்டும் வைரலாகும் டோனி ஸ்டார்க்கின் ‘I Love you 3000’ வீடியோ!

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளியானது ‘அவெஞ்சர்ஸ்’ நீக்கப்பட்ட காட்சி:மீண்டும் வைரலாகும் டோனி ஸ்டார்க்கின்  ‘I Love you 3000’ வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களை ஈர்த்த படங்களில் ஒன்று மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தப் படம், இதற்கு முன்பு வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்த டைட்டானிக், அவதார் படங்களின் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறியது.

அவெஞ்சர்ஸ் சீரிஸில் வரும் அயர்ன் மேன் கதாபாத்திரம்தான் மார்வெல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒன்று. அதில் நடித்துள்ள ராபர்ட் டொவ்னி ஜேஆரை டோனி ஸ்டார்க் எனவே ரசிகர்கள் அழைக்கவும் தொடங்கினர்.

இந்நிலையில், எண்ட்கேம் படத்தில் தானோஸிடம் இருந்து உலகைக் காப்பதற்காக ஒரு சொடக்கு போட்டு தன்னைத் தானே அழித்துக் கொண்டது மார்வெல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.

அதேசமயத்தில், படத்தில் டோனி ஸ்டார்க் தனது மகள் மார்கன் ஸ்டார்க்கிடம் பேசும் போது சொல்லும் ‘I Love You 3000’ என்ற டயலாக்கும் மிகப் பிரபலமானது.

இவ்வாறு இருக்கையில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை டிஸ்னி தனது டிஸ்னி ப்ளஸ் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியிட்டுள்ளது. அதனை பதிவு செய்து மார்வெல் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

அந்த வீடியோவில். டோனி ஸ்டார்க்கும், அவரது மகள் மார்கன் ஸ்டார்க்கும் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அதில், “தவறான முடிவை எடுத்துவிட்டேன் என நினைக்கிறேன் என டோனி கூறவும், அதற்கு மார்கன் அந்த சூழலில் முடிவெடுப்பது கடினம்தான். இருந்தாலும் மற்ற எல்லோரும் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் யாரேனும் அதனை செய்தாக வேண்டும். உங்களை நினைத்துப் பெருமையே கொள்கிறேன்” கூறுகிறார்.

இறுதியில், “Love you” என மார்கன் கூற, டோனியும் தனது பாணியில் “I Love You 3000” எனக் கூறுகிறார்.

banner

Related Stories

Related Stories